Tuesday, May 6, 2008

பவர் பாய்ண்ட் - சந்தேகமும் - விளக்கமும்

பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் ஒன்றைத் தயார் செய்து எடிட் செய்து கொண்டிருக்கிறீர்கள். பல ஆப்ஜெக்டுகள் ஒவ்வொரு ஸ்லைடிலும் உள்ளன. இவற்றைத் தேர்ந்தெடுக்க என்ன செய்வீர்கள். வழக்கம்போல ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு ஒவ்வொரு ஆப்ஜெக்டாகச் சென்று மவுஸால் கிளிக் செய்வீர்கள். இடையே ஷிப்ட் கீயை விட்டுவிட்டால் மறுபடியும் முதலிலிருந்து தொடங்க வேண்டும். இதெல்லாம் வேண்டாம். ஒரே கீயில் அனைத்து ஆப்ஜெக்டுகளையும் செலக்ட் செய்திடலாம். டெஸ்க் டாப் திரையில் உள்ள ஐகான்களை செலக்ட் செய்திட என்ன செய்கிறீர்கள். மவுஸால் ஒரு செவ்வக வடிவில் கர்சரை இழுக்கிறீர்கள். இந்த செவ்வகக் கட்டத்தில் மாட்டும் ஐகான்கள் எல்லாம் செலக்ட் செய்யப்படுகிறதல்லவா? அதே போல் பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் ஸ்லைடிலும் ஒரு நாள் செய்து பார்த்தேன். ஆஹா! அதே போல ஆப்ஜெக்டுகள் அனைத்தும் செலக்ட் ஆயின. எவ்வளவு எளிது பார்த்தீர்களா! நீங்கள் இன்று சோதித்துப் பார்த்துவிடுங்களேன். *பவர்பாய்ண்ட் தொகுப்பில் உருவாக்கப்படும் டாகுமெண்ட்களை பிரசண்டேஷன் என்று சொல்கிறோம். ஸ்லைட் ஷோ என்பது அந்த பிரசண்டேஷன் டாகுமெண்ட்டில் உள்ள ஸ்லைட்களை ஒவ்வொன்றாகக் காட்டுவது ஆகும்.




அவ்வாறு காட்சியாய்க் காட்டுகையில் அந்த ஸ்லைடுகளை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட டூல் பார், மெனு போன்ற சமாச்சாரங்கள் எதுவும் காட்டப்பட மாட்டாது.


*பவர் பாய்ண்ட்டின் ஸ்லைட் லே அவுட் டாஸ்க் பேனில் கண்டென்ட் என்பது டெக்ஸ்ட் தவிர மற்ற அனைத்தையும் குறிக்கிறது. எடுத்துக் காட்டாக டேபிள்ஸ், சார்ட்ஸ், கிளிப் ஆர்ட், டயாகிராம், ஆர்கனைசேஷன் சார்ட் அல்லது மீடியா கிளிப் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.


*நீங்கள் கீ போர்டைத்தான் அதிகம் பயன்படுத்துபவரா; அப்படியானால் இதனை நினைவில் கொள்ளுங்கள். பேஜ் அப் மற்றும் பேஜ் டவுண் கீகள் உங்களை ஒவ்வொரு ஸ்லைடாக எடுத்துச் செல்லும். ஹோம் கீ பிரசன்டேஷனில் உள்ள முதல் ஸ்லைடுக்கு எடுத்துச் செல்லும்; எண்ட் கீ பிரசன்டேஷனில் உள்ள கடைசி ஸ்லைடுக்கு எடுத்துச் செல்லும்.


பார்மட் பெயிண்டர் அண்ட் பேஸ்ட்:எம்.எஸ். வேர்ட் மற்றும் எம்.எஸ்.பவர் பாயிண்ட் தொகுப்புகளில் பார்மட் பெயிண்டர் என்னும் சாதனம் வழங்கப்பட்டுள்ளது. இதனை விரும்பிப் பயன்படுத்துபவர்களில் நீங்களும் ஒருவரா? சில வேளைகளில் இது உங்களுக்கு எரிச்சல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டிருக்கும்.


நீங்கள் இதன் ஐகான் பட்டனை டபுள் கிளிக் செய்திடாவிட்டால் ஒரு தடவை பேஸ்ட் செய்தவுடன் மறைந்து போகும். பின் மீண்டும் கிளிக் செய்து கொண்டு வர வேண்டும். பெயிண்டிங் செய்து கொண்டிருக்கும்போது நீங்கள் ஏதேனும் டெக்ஸ்ட்டில் ஒரு சிறு மாற்றம் செய்திட முயற்சிக்கையில் மீண்டும் பார்மட் பெயிண்டிங் வருகையில் நீங்கள் இலக்கு வைத்தது என்னவென்று தெரியாமல் விழிக்கும் வகையில் அது இருக்கும்.


இருந்தாலும் பார்மட் பெயிண்டிங் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றால் இந்த எரிச்சலையும் ஏமாற்றத்தையும் தவிர்த்திட வழி ஒன்று கூறுகிறேன். அடுத்த முறை பார்மட் பெயிண்டர் பட்டனுக்குப் பதிலாக பார்மட்டிங் காப்பி செய்திட Ctrl + Shift + C என்ற கீகளை அழுத்தவும். பார்மட் காப்பி ஆனவுடன் ஹைலைட்டான டெக்ஸ்ட்டில் பார்மட் பேஸ்ட் முழுமையாக்கிட Ctrl + Shift + V கீகளை அழுத்தவும். நீங்கள் எத்தனை இடத்தில் வேண்டுமானாலும் பார்மட் பேஸ்டிங்கை மேற்கொள்ளலாம். இடையே டெக்ஸ்ட் எடிட் பணியையும் மேற்கொள்ளலாம். பார்மட்டிங் மெமரியில் இருந்து கொண்டே இருக்கும்.
வேர்ட் டு பவர் பாயிண்ட் வேர்ட் தொகுப்பில் டாகுமெண்ட் ஒன்றை உருவாக்கியபின் அதனை பவர் பாய்ண்ட் பிரசன்டேஷனுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என நீங்கள் திட்டமிடுகிறீர்கள். மீண்டும் டெக்ஸ்ட் மற்றும் அதில் அமைந்துள்ள புல்லட் வரிசைகளை பவர் பாய்ண்ட் பைலிலும் டைப் செய்திடாமல் அப்படியே மாற்ற திட்டமிடுகிறீர்கள். இதற்கான வழி வேர்ட் தொகுப்பு தருகிறது.


நீங்கள் எந்த டாகுமெண்ட்டை பவர் பாய்ண்ட்டுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதனை முதலில் திறக்கவும். பின் File மெனு கிளிக் செய்து அதில் “Send To” என்ற பிரிவிற்குச் செல்லவும். கிடைக்கும் மெனுவில் “Microsoft PowerPoint” என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். பவர் பாய்ண்ட் புரோகிராம் திறக்கப் பட்டு உங்கள் டாகுமெண்ட் அழகான ஸ்லைட் ஷோவிற்குத் தேவையான அனைத்து அம்சங்களுடன் கிடைக்கும். இந்த மாற்றம் மிக அழகாக அமைய வேண்டும் என்றால் உங்களுடைய வேர்ட் டாகு மெண்ட் புல்லட் லிஸ்ட்கள் கொண்ட டெக்ஸ்ட்டாக இருந்தால் நல்லது.


லே அவுட் மாற்றம்


பல நேரங்களில் நாம் பவர் பாய்ண்ட் தொகுப்பு தரும் லேஅவுட்களிலேயே ஸ்லைட்களை ஏற்படுத்தி இருப்போம். அனைத்தையும் உருவாக்கிய பின் ஏதேனும் ஒரு ஸ்லைடிற்கான லே அவுட்டை மாற்ற எண்ணுவீர்கள். இதற்கு அந்த ஸ்லைடின் அனைத்து கூறுகளையும் மாற்ற வேண்டுவதில்லை. முதலில் பைலைத் திறந்து அந்த ஸ்லைடிற்குச் செல்லவும். பின் ஊணிணூட்ச்t மெனு செல்லவும். கிடைக்கின்ற மெனுவில் Slide Layout என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். எந்த லே அவுட்டை புதியதாகப் பயன்படுத்த விரும்புகிறீர்களோ அதனைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பின் Reapply பட்டனைக் கிளிக் செய்திடவும். ஸ்லைட் புதிய லே அவுட்டிற்கு மாறிவிடும்.

No comments: