Sunday, May 11, 2008

டிஜிட்டல் போட்டோ ஆல்பம்


மைக்ரோசாப்ட் வழங்கும் பவர் பாய்ண்ட் தொகுப்பில் உங்களுடைய ஸ்கேன் செய்த போட்டோக்களை மற்றும் பிற படங்களையும் தொகுத்து ஒரு போட்டோ ஆல்பமாகத் தயாரிக்கலாம். நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இதனைக் காட்டி மகிழலாம். அத்துடன் வர்த்தக ரீதியாக விற்பனைப் பொருட்கள் அல்லது நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்தும் போட்டோ ஆல்பம் தயாரித்து வழங்கலாம்.


இதற்கான வழிகள்


1. முதலில் போட்டோ ஆல்பத்தில் இணைக்க வேண்டிய அனைத்து படங்களையும் ஒரு போல்டருக்குக் கொண்டு வரவும். இதில் டிஜிட்டல் கேமரா படங்கள் மற்றும் இணையத்திலிருந்து இறக்கிய படங்களும் இருக்கலாம்.
2. பவர் பாய்ண்ட் புரோகிராமைத் திறந்து அதில் Insert” மெனுவில் “Picture” என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும். பின்னர் இதில் “New Photo Album” என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
3. இப்போது போட்டோ ஆல்பம் என்ற தலைப்பில் சிறிய டயலாக் பாக்ஸ் ஒன்று திறக்கப்படும். இதில் “Insert picture from” என்ற இடத்தில் “File/Disk” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது படங்களை இணைக்க நீங்கள் தயாராகி விட்டீர்கள். இங்கு எவ்வளவு படங்கள் வேண்டுமானாலும் இணைக்கலாம். இங்கு கேமரா அல்லது ஸ்கேனரில் இருந்து படங்களை இணைக்க வேண்டுமானால் அதற்கான “Scanner/Camera” என்ற ஆப்ஷனைக் கிளிக் செய்திட வேண்டும்.
4. இணைக்கப்பட்ட படங்களை எடிட் செய்திடலாம். கோணத்தை மாற்றி அமைக்கலாம். பிரைட்னஸ் மற்றும் காண்ட்ராஸ்ட் கலரினை அனைத்து படங்களுக்கும் ஒரே மாதிரியாக அமைப்பதற்காக மாற்றலாம்.
5. இனி “Album Layout” பகுதியில் உங்களுக்குப் பிடித்த பிக்சர் லே அவுட் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். அத்துடன் பிரேம் எப்படி அமைய வேண்டும் என்பதனையும் தேர்ந் தெடுக்கலாம்.
6. தேவையான படங்களை இணைத்து அவற்றை வேண்டிய முறையில் எடிட் செய்து இவற்றை அமைப்பதற்கான லே அவுட் மற்றும் பிரேம்களையும் தேர்வு செய்து முடித்த பின்னர் “Create” என்ற கட்டளையைக் கொடுக்கவும்.
ஆல்பம் உருவானவுடன் அந்த ஆல்பம் பைலை சேவ்செய்திடவும். இந்த பைலை ஸ்லைட் ஷோவில் இயக்கினால் அனைத்து படங்களும் வரிசையாக நீங்கள் விரும்பிய வகையில் அமைத்த வகையில் காட்டப்படுவதனைப் பார்க்கலாம்.

No comments: