Sunday, May 11, 2008

டாகுமெண்ட்டிற்கு புதிய வடிவம்

டாகுமென்ட்களை பல நோக்கத்திற்காக அவற்றின் ஒரு வடிவிலிருந்து இன்னொரு வடிவிற்கு மாற்ற வேண்டியதிருக்கு. எடுத்துக் காட்டாக வேர்ட் பைல் ஒன்றை அதன் பி.டி.எப். பைலாக மாற்ற வேண்டியதிருக்கும். பி.டி.எப். என்பது Portable Document Format என்பதன் சுருக்கமாகும். அதாவது டாகுமெண்ட் ஒன்றை அதன் எழுத்து வகை பதியாத கம்ப்யூட்டரில் கூடப் படிக்கும் வகையில் மாற்றி பயன்படுத்துவதுதான் இந்த வகை பைலின் வசதி ஆகும்.



குறிப்பாக தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் எல்லா கம்ப்யூட்டர்களிலும் இருக்கும் என்று உறுதி செய்திட முடியாது.
இதற்காக பைல் ஒன்றை அனுப்புகையில் அந்த பைல் உருவாக்கப்பட்ட பாண்ட் எனப்படும் எழுத்து பைலையும் அனுப்ப வேண்டும். இந்த எழுத்துவகையை அந்த டாகுமெண்ட்டைப் படிக்க விரும்புபவர் தன்னுடைய கம்ப்யூ ட்டரில் பதிந்து வைத்த பின்னரே படிக்க இயலும். இல்லை என்றால் அது படிக்க முடியாத கோணல் மாணல் கட்டங்களாகத்தான் தெரி யும். இதற்கெனவே டாகுமெண்ட் ஒன்றை பி.டி.எப்.பைலாக மாற்ற பல புரோகிராம்கள் இருக்கின்றன. ஒரு சில புரோகிராம்களில் பி.டி.எப். பைல் ஒன்றை உருவாக்கினால் அந்த பைலின் இறுதியால் இது இந்த புரோகிராம் மூலம் பி.டி.எப். ஆக்கப்பட்டது என்ற செய்தியும் கூடவே ஒட்டிக் கொண்டு வரும்.


ஆனால் இப்போது சொல்லப்படப்போவது அப்படிப்பட்ட புரோகிராம் இல்லை. இது ஒரு பிளக்–இன் புரோகிராம் ஆகும். இதன் பெயர் Universal Document Converter . இதனை http://www.printdriver.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக இறக்கிப் பதிந்து கொள்ளலாம்.


பி.டி.எப். அல்லது வேறு வடிவில் ஒரு டாகுமெண்ட்டை மாற்ற வேண்டுமெனில் முதலில் டாகுமெண்ட்டைத் தயார் செய்து கொள்ளுங்கள். ஏற்கனவே தயார் செய்திருந்தால் அதனைத் திறந்து கொள்ளுங்கள். பின் பைல் மெனு சென்று அதில் பிரிண்ட் என்னும் பிரிவில் கிளிக் செய்தி பிரிண்ட் விண்டோ பெறுங்கள். இதில் பிரிண்டரின் பெயர் உள்ள கட்டத்தில் Universal Document Converter என்பதை உங்கள் பிரிண்டராகத் தேர்ந்தெடுங்கள். அடுத்து புராபர்ட்டீஸ் என்பதில் கிளிக் செய்து கீழாக விரியும் மெனுவினைப் பெறவும்.


இதில் பல பைல் டைப் கிடைக்கும். இதில் உங்கள் டாகுமெண்ட்டை எந்த வித பைல் டைப்பில் மாற்ற வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்தால் அந்த வகையில் டாகுமெண்ட் புதிய வடிவம் பெறும். பழைய வடிவில் டாகுமென்ட் அப்படியே இருக்கும். புதிய வடிவத்தினை நீங்கள் உங்கள் வசதிக்கென பயன்படுத்தலாம். இதனைப் பயன்படுத்தி வெப் பேஜ்களைக் கூட ஜேபெக் (.jpg) பைலாக மாற்றலாம்.

இந்த புரோகிராம் மூலம் கீழ் காணும் பார்மட் மாற்றங்களை மேற்கொள்ளலாம்.

Adobe PDF to JPEG
Word Document to PDF
Excel Spreadsheet to PDF
Power Point to JPEG
Visio Drawing to PDF
AutoCAD Drawing to TIFF மற்றும் Web Page to JPEG
அனைவருக்கும் தேவையான இந்த பைலை இலவசமாக இறக்கிப் பதிந்து கொள்ளுங்கள்.

No comments: