நமக்கு வேண்டிய தகவல்களை இன்டர் நெட்டில் தேட பெரும்பாலானோர் பயன்படுத்துவது கூகுள் சர்ச் இஞ்சின் தான். இவ்வகையில் கூகுள் மட்டுமே இந்த கம்ப்யூட்டர் உலகின் ஒரே ஒரு சர்ச் இஞ்சின் போலத் தோற்றத்தை உருவாக்கி உள்ளது. தேடல் பிரிவில் ஏறத்தாழ 50% பேர் கூகுள் தளத்தையே பயன்படுத்துகின்றனர்.
இத்துடன் யாஹூ மற்றும் எம்.எஸ்.என். ஆகியவற்றையும் சேர்த்தால் 90% வந்துவிடுகிறது. அப்படியானால் வேறு சர்ச் இஞ்சின்கள் உள்ளனவா? என்று உங்கள் மனதில் ஓடும் எண்ணங்கள் தெரிகின்றன.
ஆம், இன்னும் பல சர்ச் இஞ்சின்கள் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. அவற்றைப் பற்றி இங்கு காணலாம். அவை எப்படி செயல்படுகின்றன என்பதற்காக ஓரிருமுறை இவற்றைப் பயன்படுத்திப் பாருங்களேன்.
1.www.chacha.com : சிறப்பாகச் செயல் படும் சர்ச் இஞ்சின். தற்போது இது அமெரிக்காவில் மொபைல் போனுக்கும் தேடிய தகவலை அனுப்புவதால் இந்த தளத்திற்குச் சென்றவுடன் மொபைல் போனில் நாம் தேடும் சொற்களைக் கேட்டு தளம் திறக்கப்படும். இதில் looking for chacha classic என்ற இடத்தில் கிளிக் செய்தால் கம்ப்யூட்டரிலேயே முடிவுகள் தருவதற்கான டெக்ஸ்ட் விண்டோ கிடைக்கும். இதில் டெக்ஸ்ட் டைப் செய்தால் கூகுள் தளத்தில் கிடைப்பது போலவே தகவல்கள் கிடைக்கின்றன. இதற்கு எந்த ரெஜிஸ்ட்ரேஷனும் தேவையில்லை.
2. www.stumple.upon.com : இந்த தளம் நாம் கொடுக்கும் தேடல் சொற்களை வைத்து நம்முடைய விருப்பங்களை அறிந்து அதற்கேற்ற வகையில் தளங்களைப் பிரித்து அடுக்கித் தருகிறது. தொடக்கத்திலிருந்து நம் தேடல்களைக் கவனித்து இந்த சேவையைத் தருகிறது. ஐரோப்பிய மொழிகள் பலவற்றில் இது செயல்படுகிறது.
3. www.ask.com : இந்த தளத்தினை நம் நாட்டில் பலர் பயன்படுத்துகின்றனர். இதன் சிறப்பு இது நம்மை வழி நடத்தும் விதம் தான். நம் தேடல் தன்மையைப் புரிந்து கொண்டு தேடல் வழிகளை இன்னும் சுருக்கி தேடும் தளங்களைப் பட்டியலிடும். எடுத்துக் காட்டாக computer tips எனத் தேடப் போகையில் computer tips and tricks எனத் தேடலாமே? என்று வழி காட்டும்.
computer tips and tricks எனத் தேடப்போனால் windows xp tricks அல்லது word tips எனத் தேடலாமா? என்று கேட்கும். மிக மிகப் பயனுள்ள தேடு தளம்.
4.www.kosmix.com : இந்த தளம் தொடக்கத்திலேயே தகவல் துறைகளைப் பிரித்து அதிலிருந்து தேடலை மேற்கொள்ள வழி காட்டுகிறது. மெடிகல் மற்றும் உடல் நலம் சார்ந்த தகவல்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. மற்றவற்றையும் தேடித் தருகிறது.
5.www.technocrati.com இந்த தளம் செய்திகளுடன் கூடிய ஒரு தளம். யாஹூ போல செயல்படுகிறது. இதில் தேடல் முடிவுகள் சிறிய பாராக்களாக சில வேளைகளில் சிறிய படங்களுடன் தரப்படுகின்றன. நாம் தேடிய சொற்கள் அதில் எங்கெங்கு உள்ளன என்று ஹை லைட் செய்யப்படுகிறது.
6.www.draze.com : கூகுள் அளவிற்கு தகவல்களை இந்த தளம் அளிக்கிறது. மேலும் மற்ற தளங்களோடு எங்கள் தேடலையும் ஒப்பிட்டுப் பாருங்கள் என்று சவால் விட்டு மற்றதில் தேடுகையில் என்ன என்ன இல்லை என்று பட்டியலிடுகிறது. திறன் கொண்ட சற்று சவாலான தளம் இது.
7.http://www.msdewey.com/ இந்த தளத்தில் தகவல் தேடுவது திரைப்படம் பார்ப்பது போல இருக்கிறது. மிஸ்.ட்யூவி என்ற அழகான இளம் பெண் தேடலின் போது கூடவே இருக்கிறார். இவர் அறிமுகமாவது ஒரு சினிமா போல தரப்படுகிறது.தேடலுக்கான சொல் அமைக்கும் இடத்தில் சொல்லை டைப் செய்யாவிட்டால் ‘ஹலோ இங்கு ஏதாவது டைப் செய்யுங்களேன்’ என்று கதவைத் தட்டி அழைக்கிறார்.
ஒன்றும் டைப் செய்யவில்லை என்றால் எப்போதும் ஒரு புன்முறுவலுடன் நம்மைத் தேடுகிறார். ஒரு மேகஸினை எடுத்துப் படிக்கிறார். போன் செய்கிறார். ஏதேனும் டைப் செய்திருக்கிறோமா என சர்ச் பாக்ஸை எட்டிப் பார்க்கிறார். டைப் செய்து முடித்து தேடச் சொன்னால் ‘இருங்கள் மிஸ் ட்யூவி யோசிக்கிறார்’ என்ற செய்தி கிடைக்கிறது. பின் தேடல் சொல்லுக்கான பட்டியல் ஓடுகிறது. பத்து பத்தாக அல்ல; தொடர்ந்து ஓடுகிறது. நீங்கள் கர்சரைக் கொண்டு சென்று நிறுத்திப் பார்க்கலாம். இதில் ட்யூவியின் பார்வையில் சிறந்த தளங்கள் என அதிலேயே நல்ல தளங்கள் காட்டப்படுகின்றன. தேடலில் இது ஒரு தனி ரகம்.
8. http://searchwithkevin.com : இந்த தளம் இன்னொரு வகையில் வித்தியாசமானது. எங்கள் தளத்தில் தேடுங்கள்; அவ்வப்போது பரிசுகள் உண்டு என்று அழைக்கிறது. தள முகப்பில் தீயுடன் தேடுங்கள் என்று விளம்பரப் படுத்தப்படுகிறது. தேடலுக்கான முடிவுகள் குகூள் தளத்தில் கிடைப்பது போலவே கிடைக்கிறது. மற்றபடி வேறுபாடு எதுவும் இல்லை.
9. www.rollyo.com : இந்த தளம் தகவல்களைக் காட்டும் விதம் வித்தியாசமாக உள்ளது. மேலும் ஒவ்வொருவரும் தங்களுக்கேற்ற வகையில் தேடலை அமைக்கலாம். எந்த தகவல் பிரிவில் உங்கள் தேடல் இருக் குமோ அதனை மட்டும் தேடும் வகையில் செயல் படலாம். எப்போதும் ஒரே மாதிரியாக கூகுள், யாஹூ மற்றும் மைக்ரோசாப்ட் தேடல் தளங்களையே பயன்படுத்திக் கொண் டிராமல் மற்றவற்றையும் பார்த்து பயனடையலாமே.
யாஹூ இந்தியாவின் புதுவித தேடல்
யாஹூ இந்தியா தளத்தின் சர்ச் இஞ்சின் புதிய வகைத் தேடலையும் முடிவு அறிவிக்கும் வழியையும் நடைமுறைப்படுத்தி உள்ளது. Glue Pages Beta என அழைக்கப்படும் இந்த வசதி யாஹூ இந்தியா தளத்தில் (www.yahoo.in) மட்டுமே உள்ளது. ஏதாவது ஒன்றைத் தேடினால் அது சார்ந்த அனைத்து தகவல்கள், படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் தொகுக்கப்பட்டு தரப்படுகிறது.
எடுத்துக் காட்டாக “diabetes” என்று தேடினால் HowStuffWorks, Yahoo! Groups, Yahoo! Health, Yahoo! Answers, மற்றும் இது குறித்த blogs ஆகியவற்றிலிருந்து தகவல்கள் எடுக்கப்பட்டு தரப்படுகின்றன. மேலும் தகவல்களுக்கான தளங்களின் முகவரியும் தரப்படுகின்றன. தொடர்ந்து இன்னும் பல வகைகளின் கீழ் தகவல்களைப் பெற்றுத் தரும் வகையில் இந்த வசதி மேம்படுத்தப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
இணைய தளத்திற்கான ஷார்ட் கட்
உங்களுக்குப் பிடித்த இணைய தளங்களுக்கு ஷார்ட் கட் ஐகான் இருந்து அவற்றைக் கிளிக் செய் தால் நேரடியாக நீங்கள் அந்த தளத்திற்குச் சென் றால் எப்படி இருக்கும்? அப்படிச் செய்ய முடியுமா?
முடியும். இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தொகுப் பில் உங்களுக்குப் பிடித்த இணைய தளத்தைப் பார்க்கையில் தளத்தின் முகவரிக்கு அருகே சிறிய ஆங்கில எழுத்தான “e” இருக்கும் அல்லவா? இப்போது உங்கள் பிரவுசர் விண்டோவைச் சிறிய தாக்கி அதன் பின் அந்த சிறிய “e” எழுத்து உள்ள கட்டத்தை இழுத்து வந்து டெஸ்க்டாப்பில் உள்ள காலியிடத்தில் விட்டு விட்டால் அதுதான் உங்களுக்குப் பிடித்த தளத்தின் ஷார்ட்கட். இந்த ஐகான்களின் மீது கிளிக் செய்தால் பிரவுசர் திறக்கப்பட்டு நீங்கள் தளத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
http://www.msdewey.com/ இந்த தளத்தில் தகவல் தேடுவது திரைப்படம் பார்ப்பது போல இருக்கிறது. மிஸ்.ட்யூவி என்ற அழகான இளம் பெண் தேடலின் போது கூடவே இருக்கிறார். இவர் அறிமுகமாவது ஒரு சினிமா போல தரப்படுகிறது. தேடலுக்கான சொல் அமைக்கும் இடத்தில் சொல்லை டைப் செய்யாவிட்டால் ஹலோ இங்கு ஏதாவது டைப் செய்யுங்களேன் என்று கதவைத் தட்டி அழைக்கிறார். ஒன்றும் டைப் செய்யவில்லை என்றால் எப்போதும் ஒரு புன்முறுவலுடன் நம்மைத் தேடுகிறார்.
No comments:
Post a Comment