Monday, May 19, 2008

சிஸ்டம் டிப்ஸ்!

பைல் பெயரை முழுவதுமாய்ப் பார்க்க: விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல் பெயர்களில் உள்ள இறுதி மூன்றெழுத்துக்கள் கொண்ட பைல் வகைப் பெயரினைக் காட்டாது. அவ்வாறு தான் செட் செய்யப்பட்டுள்ளது. ஆனால் நாம் அதன் ஐகான் மூலம் அது எத்தகைய பைல் வகை, வேர்ட், பேஜ் மேக்கர், எம்பி3, பெயிண்ட், என அறிந்து கொள்ளலாம். இந்த சிறிய சலுகையைப் பயன்படுத்தி சில வைரஸ் பைல்கள் வழக்கமான பைல்களுக்கான ஐகான்களுக்குள் ஒழிந்து வருகின்றன. நாமும் அவை இ.எக்ஸ்.இ. பைல் என அறியாமல் வேர்ட் அல்லது அதைப் போன்ற வழக்கமான பைல் என உடனே கிளிக் செய்துவிடுகிறோம்.



பைலின் துணைப் பெயர் தெரிந்தால் நிச்சயம் அதனைக் கிளிக் செய்து திறக்க மாட்டோம். எனவே பைலின் முழு பெயரும் தெரியும்படி நாம் செட் செய்திடலாம். My Computer சென்று அதில் Tools என்னும் பிரிவில் Folder Options என்பதில் கிளிக் செய்திடவும். பின் கிடைக்கும் விண்டோவில் View டேபில் கிளிக் செய்து என்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். OK என்டர் தட்டி அதனை மூடியபின் உங்கள் பைல்களை நீங்கள் அவற்றின் துணைப் பெயர்களுடன் பார்க்க முடியும்.


இன்ஸ்டால் செய்த பின் இ.எக்ஸ்.இ. பைலை என்ன செய்திடலாம்?: நீங்கள் அடிக்கடி சிறிய இலவச புரோகிராம்கள் குறித்து எழுதுகையில் தளங்களில் இருந்து அவற்றை டெஸ்க் டாப்பில் பதிந்து வைத்து பின் இன்ஸ்டால் செய்திடச் சொல்கிறீர்கள். பதிந்த பின் அந்த இ.எக்ஸ்.இ. பைலை என்ன செய்யலாம் என்று சொல்லவில்லையே என கோயமுத்தூர் வாசகி ஒருவர் கேட்டுள்ளார். அவருக்கும் மற்றவர்களுக்குமான குறிப்புகள். நீங்கள் டவுண்லோட் செய்திடும் பைல் (இது இ.எக்ஸ்.இ. அல்லது ஸிப் பைலாக இருக்கலாம்) தான் புரோகிராமின் மூல பைல். இவ்வாறு இறக்கி, இன்ஸ்டால் செய்திடும் புரோகிராம் உங்களுக்கு அதிகம் பயன்படுவதாக வைத்துக் கொள்வோம்.


திடீரென அந்த புரோகிராம் சரியாகச் செயல்படவில்லை என்றால் மீண்டும் புரோகிராமினை ரீ இன்ஸ்டால் செய்திட எண்ணுவோம். மீண்டும் இணைய தளம் சென்று அந்த புரோகிராமை மீண்டும் டவுண்லோட் செய்திட வேண்டும். உங்கள் துரதிருஷ்டம் அந்த புரோகிராம் பைல் நீக்கப்பட்டு கூடுத வசதிகளுடன் கட்டணம் செலுத்திப் பெரும் பைல் இருக்கும். நீங்கள் என்ன செய்வது? எனத் தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டாம். எனவே இன்ஸ்டால் செய்தபின் இது போன்ற சாப்ட்வேர் புரோகிராம்களுக்கென ஒரு போல்டர் அமைத்து அதில் சேவ்செய்து வைக்கவும். இயங்கும் புரோகிராம் கெட்டுப் போகையில் இது மீண்டும் உங்களுக்குக் கை கொடுக்கவும்.

No comments: