பல இணைய தளங்களில் ஷார்ட் கட் கீ தொகுப்புகளைக் காணலாம். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிகார பூர்வமான இணைய தளத்தில் இவற்றைக் காணலாம். விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் ஷார்ட் கட் கீ தொகுப்பினை http://support.microsoft.com/kb1301583 என்ற முகவரியில் உள்ள தளத்தில் காணலாம். எக்ஸ் பி தொகுப்பிற்கான அனைத்து ஷார்ட் கட் கீகளும் இங்கு வகை வாரியாகத் தரப்படுகின்றன. பல உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். நிறைய ஷார்ட் கட் கீகள் உங்களுக்கு ஆச்சரியத்தை வரவழைக்கும்.
வேர்டில் இல்லாத அயல் குறியீடுகளுக்கான ஷார்ட் கட் கீகளை ஓர் இணைய தளம் தருகிறது. அதன் இணைய முகவரி http://tinyurl.com/2qqtmo அனைத்து புரோகிராம்களுக்கான ஷார்ட் கட் கீகளையும் பெற ஒரு கலங்கரை விளக்கமாக ஒரு இணைய தளம் உள்ளது. அதன் முகவரி www.keyxl.com. உங்களுக்கு எந்த புரோகிராமிற்கு ஷார்ட் கட் கீ தொகுப்புகளின் பட்டியல் வேண்டுமோ அந்த புரோகிராமின் பெயரை இதில் உள்ள கட்டத்தில் டைப் செய்தால் அந்த புரோகிராமிற்கான தளத்திற்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
ஷார்ட் கட் கீ தொகுப்பு மூலம் வேடிக்கையான அனுபவம் தருபவை ஈஸ்டர் எக்ஸ் ஆகும். இவற்றைத் தேடித்தான் கண்டுபிடிக்கும் அளவில் எண்ணிக்கையில் பெரியதாக உள்ள தளத்தின் முகவரி : www.eggheaven.com இங்கு சென்றால் நேரம் போவதே தெரியாமல் நீங்கள் இதிலேயே ஆழ்ந்து போய்விடுவீர்கள். அந்த அளவிற்கு ஈஸ்டர் எக்ஸ் குறித்த தகவல்களை இந்த தளம் தருகிறது.
ஷார்ட் கட் கீ தொகுப்புகளுக்குப்பின் நமக்கு அதிகம் உதவி செய்வன மேக்ரோக்களாகும். இந்த மேக்ரோக்கள் எப்படி எதற்காகச் செயல்படுகின்றன என்பதனை http://tinyurl.com/2roen7 என்ற முகவரியில் உள்ள தளத்தில் காணலாம். இது ஒரு மைக்ரோசாப்ட் டுடோரியல் பக்கமாகும். இதில் மேக்ரோக்கள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment