Monday, May 12, 2008

டிப்ஸ்

இன்டர்நெட் தளங்களில் தகவல்களைத் தேடுகையில் பிரவுசர் பல தற்காலிக போல்டர்களையும் பைல்களையும் உருவாக்குகிறது. நீங்கள் பிரவுஸ் செய்து முடித்த பின்னரும் அவை உங்கள் கம்ப்யூட்டரில் இடம் பெறுகின்றன. சில வேளைகளில் நீங்கள் அறியாமல் சில வைரஸ் பைல்கள் அல்லதுஅவை குறித்த தகவல்கள் இங்கே அமர்ந்துவிடும். இதை தடுக்க.....

1. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தொகுப்பில் டூல்ஸ் (Tools) மெனு செல்லவும். அதில் உள்ள இன்டர்நெட் ஆப்ஷன்ஸ் (Internet Options) என்னும் பிரிவைக் கிளிக் செய்திடவும்.

2. பின் அட்வான்ஸ்டு (Advanced) என்னும் டேபைக் கிளிக் செய்திடவும்.

3. இதில் Security என்னும் பிரிவில் Empty Temporary Internet File என்ற இடத்தைக் கண்டறியவும். இதன் செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.

4. பின் Apply பட்டனை அழுத்தி வெளியேறவும்.

No comments: